உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா

சிவகங்கை பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, ராகு, பலி பீடம் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வேள்விகள், பூஜைகள் செய்து வருடாபிஷேக பூஜைகளை செய்தனர். கலெக்டர் அலுவலக அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொழிலதிபர் கண்ணன் வருடாபிேஷக விழாவிற்கு சிறப்பு வகித்தார்.கிராமிய நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மற்றும் எஸ்.பி.,அலுவலக அலுவலர், ஊழியர்கள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் இருந்த விநாயகரை தரிசனம் செய்தனர். வருடாபிஷேக விழா ஏற்பாட்டை த.மா.கா., தொண்டரணி தலைவர் அயோத்தி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !