மேலும் செய்திகள்
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
58 minutes ago
சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்; குவிந்த பக்தர்கள்
58 minutes ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் வென்னைக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்தார். பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். நானே குறுகியவனாகவும், ஆணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன் என்பதே வாமன அவதாரத்தின் தத்துவமாகும். நானே பூமியின் எல்லாவாகவும் இருக்கிறேன் என்பது திருவிக்ரம அவதாரத்தின் தத்துவம். தானத்தில் சிறந்த மகாபலி அதில் தன்னை யார் வெல்ல முடியும் என்ற கர்வத்தை போக்க பகவான் எடுத்த முக்கிய அவதாரமாக இருக்கும் திருவிக்கிரமன், வாமனார் அவதாரங்களுடன் தனித்தனி சன்னதியாக, திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக அருள்பாலிக்கிறார். சிறப்பு வாய்ந்த திருவோணத்தை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு வாமனருக்கு மகா திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு வெண்ணை காப்பு அலங்காரத்தில் லச்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து லட்சதீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலிக்கிறார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.
58 minutes ago
58 minutes ago