மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
9 minutes ago
மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
9 minutes ago
திருப்பூர் ஸ்ரீராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகம்
9 minutes ago
கோவை ; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு, கொடி கம்பம் முன்பு பூக்களால் ஆன பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் போடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி காலை ஐயப்பசுவாமிக்கு சகல வித வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 5.00 மணிக்கு நிர்மால்யபூஜை, 7.30 க்கு சீவேலி, 9.00 மணிக்கு பந்திரடி பூஜை, 10.00 மணிக்கு உஷபூஜை நடந்தது. சுவாமிக்கு சம்பங்கி, செவ்வந்தி, துளசி ஆகியவைகளை நாரில் தொடுத்து அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் நெய் தீபங்களால் தூண்டாவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. தங்கக்கொடிமரத்தருகே துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செண்டுமல்லி, மல்லி மலர்களை கொண்டு அத்தப்பூக்கோலம் ஒன்பது வரிசைகளில் போட்டிருந்தனர். கோவில் கருவறைக்கு பின் பகுதியிலும் அத்தப்பூக்கோலம் போடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, கோவிலிலுள்ள அன்னதானக்கூடத்தில் ஓணசத்யா விருந்து பரிமாறப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
9 minutes ago
9 minutes ago
9 minutes ago