மேலும் செய்திகள்
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
48 minutes ago
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா
48 minutes ago
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண பூஜைக்காக, சபரிமலை நடை, செப்., 3 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று விசேஷ பூஜைகள் இல்லை. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு படி பூஜை, அத்தாழ பூஜை நடந்தது. பின், திருவோண விருந்தில், நேற்று உத்திராடம் விருந்து நடந்தது. இன்று திருவோண விருந்தும், நாளை ஒன்றாம் ஓணம் விருந்தும் நடைபெறும். திருவோண நாளில் ஐயப்பனை வழிபட, திரளான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். சன்னிதானத்தின் வலதுபுறம் பிரமாண்ட அத்தப்பூ கோலத்தை, தேவசம் போர்டு ஊழியர்களும், பக்தர்களும் இணைந்து அமைத்துள்ளனர்.
48 minutes ago
48 minutes ago