மேலும் செய்திகள்
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
45 minutes ago
சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்; குவிந்த பக்தர்கள்
45 minutes ago
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா
45 minutes ago
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரஹன்னாயகி சமேத அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பிரஹன்னாயகி சமேத அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி கடந்த 29ம் தேதி காலை 10:00 மணியளவில் கணபதி ஹோமம், கோ பூஜை உடன் விழா தொடங்கியது,தொடர்ந்து 31ம் தேதி மாலை 5:00 மணியளவில் கிராமம் சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.1ம் தேதி காலை 9:00 மணியளவில் திசா ஹோமம், சாந்தி ஹோமம், மாலை 5:00 மணியளவில் அங்குரார்பணம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து 2ம் காலை 8:00 மணியளவில் மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், பின்னாபி ஷேகம் உள்ளிட்ட ஹோமங்களும் மாலை 5:00 மணியளவில் விநாயகர் பூஜை, வர்ண பகவான் சோமகும்ப பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் காலை 9:00 மணி அளவில் விசேஷ சந்தி, விநாயக பூஜை, வருண பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பரிவார யாகம் துவக்கம், 6:00 மணியளவில் நாவக்னி யாகம், விநாயக பூஜை, வருண பூஜை, சந்திர பகவான் வழிபாடு தொடர்ந்து நான்காம் கால மண்டல பூஜை நடந்தது.காலை 9:15 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சான்தரிசனம் செய்தனர். கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
45 minutes ago
45 minutes ago
45 minutes ago