உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

மகா சக்தி மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு மோட்டூரில் அமைந்துள்ள சக்தி விநாயகர், பாலமுருகன், மகாசக்தி மாரியம்மன், சீனிவாச பெருமாள், கங்கை அம்மன், முத்துமலை முருகன் மற்றும் நவகிரக சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாசு சாந்தி போன்ற பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் சுவாமிக்கு சக்தி கிரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை முதலாம் கால யாக பூஜையுடன் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது.தொடர்ந்து இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜையுடன் நாடி சந்தானம் தத்துவார்த்தை யாத்திரதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கடம் புறப்பட்டுகோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !