சென்னையில் ஓணம் பண்டிகை; மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு
ADDED :114 days ago
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, அறுசுவை உணவுகளை படைத்து கொண்டாடினர். ஓணம் பண்டிகையையொட்டி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ‘ஓணம் சத்திய’ என்று அழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோயிலில் அத்தப் பூ கோலமிட்டும், வாழ்த்துக்களை பரிமாறியும் ஓணம் கொண்டாடினர்.