திருஆவினன்குடி கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்; சிறப்பு யாக பூஜை
ADDED :104 days ago
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான திருஆவினன்குடி கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது. 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடைபெற்றது. குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.