உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

புதுச்சேரி; முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவி லில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் நேற்று சுவாமி தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 54ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் ேஹாமம் மற்றும் திருமஞ்சனம், இரவில் பல்வேறு வாகனங்களில் நரசிம்மருடன் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. கடந்த 31ம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. ஒன்பதாம் நாளான நேற்று ஹயக்ரீவ ஜெயந்தி தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரவு துவாதாசாராதனம், புஷ்ப யாகம், துவாஜஅவரோஹணம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை மற்றும் டோலோற்சவம் நடந்தது. இன்று இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !