உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று கதளி கவுரி விரதம், அனந்த விரதம்: சிவ பார்வதியை தரிசிக்க வளமும் நலமும் சேரும்!

இன்று கதளி கவுரி விரதம், அனந்த விரதம்: சிவ பார்வதியை தரிசிக்க வளமும் நலமும் சேரும்!

கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் பூஜை செய்வது சிறந்தது. ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியில் செய்யப்படுவது கதளீ கவுரி விரதமாகும். வாழை மரத்தடியில், இலையில் அம்மனை வைத்து, வாழை பழம் படைத்து வழிபட வேண்டும். வீட்டில் பலகையில் இலையை வைத்து, அதன்மீது அம்மன் படம் வைத்தும் வழிபடலாம். இந்த கவுரி விரத வழிபாட்டால் திருமண தடை நீங்கும். வாழையடி வாழையாக குலம் தழைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சோமவார தினமான இன்று சிவ பார்வதியை தரிசிக்க வளமும் நலமும் சேரும்.. சுகமான வாழ்வு அமையும்!அனந்த விரதத்தைப் பற்றி பகவான் கண்ணனே பாண்டவர்களுக்குச் சொன்னது. “அனந்த விரதம் என்பது எல்லாப் பாவங்களையும் அகற்றி அனந்த சுகத்தைத் தரும். அனந்தமாக (முடிவில்லாத ஏராளமான) செல்வம், சந்ததி முதலிய பலனையும் கொடுக்கும். பரப்ரும்மமே அனந்தன் என்ற பெயருடன் சகல வடிவாகவும் இருக்கிறார். ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இன்று சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேக தரிசித்தால் தடைகள் அனைத்தும் நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !