காளஹஸ்தி சிவன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கிரகண கால அபிஷேகம்
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் 2025 ஆம் ஆண்டுக்கான பவித்ரோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பவித்ரோற்சவத்தின் நான்காம் நாள் கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமப் பூஜைகள் நடைபெற்று, பவித்ரா மாலைகளை கோயில் வேதப் பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த நிலையில் நாளை 7ம் தேதி சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் கோயிலில் நடைபெறும் அனைத்து அபிஷேகங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. கிரகண சமயத்தின் போது மூலவர்களுக்கு கிரஹனகால அபிஷேகம் கோயிலில் அர்ச்சகர்களால் மட்டுமே செய்யப்படும். கிரஹணத்திற்குப் பிறகு 8ம் தேதி காலை காளஹஸ்தீஷ்வரர் - ஞானப் பிரசுனாம்பிகை தாயாரின் தரிசனம் மற்றும் ராகு கேது பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.