அழகு வள்ளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
                              ADDED :53 days ago 
                            
                          
                          
கமுதி; கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம்மன் உருவம் பொறித்த கொடிபட்டத்தினை கிராமமக்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.பின்பு கோயிலில் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கொடி மரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அழகு வள்ளியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருள்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டினர். அன்னதானம் வழங்கப்பட்டது. செப்.15ல் விளக்கு பூஜை, செப்.16ல் பொங்கல் விழா,செப்.17ல் அக்கினிசட்டி,பூக்குழி இறங்குதல், சாக்கு வேடம் அணிதல், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராமமக்கள் செய்தனர்.