குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :109 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, குண்ணவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பக்த ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசநீரை, கோவில் கோபுரத்தின் கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவர், சீதா, லட்சுமணன், ராமச்சந்திர சுவாமிகளின் சிலைகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல, உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லுாரில் அமைந்துள்ள கங்கையம்மன் மற்றும் பால்முனீஸ்வரர் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது.