உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.பழநி, முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் செப்.2., முதல் செப்.12.,வரை ஆவணி பிரம்மோற்ஸவ விழா நடைபெறுகிறது. இதில் செப்.2., காலை கோயில் வெளிப்புற பிரகாரத்தில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம் நடைபெற்று விழா துவங்கியது. செப்.,8 மாலை திருமகள் மன்மகள் அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் மாலை மாற்றுதல், கோத்திரம் கூறுதல் ஆகியவற்றுடன் நடைபெற்றது. மாங்கல்யதாரணம் 6:50 மணிக்கு நடந்தது. இதில் பக்தர்கள் பாடல்கள் பாடி,ஞ ராம நாமம் ஜெபித்து கலந்து கொண்டனர். கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று செப்.9., இரவு பாரிவேட்டை நடைபெறும். செப்.,10.,காலை 7:00 மணிக்கு மேல் தேர் வடம்பிடித்தல் நடைபெறும். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.12., விடையாற்றி உற்சவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !