கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :90 days ago
கோவை; ஆவணி மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், ஆவணி மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. . புதூர் தெரு எண் - 9 ல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை, நடந்தது.இதில் சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.