உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் நீராட பக்தர்களிடம் ரூ. 30 ஆயிரம் வசூல் : ஆடியோ வைரல்

ராமேஸ்வரம் கோயிலில் நீராட பக்தர்களிடம் ரூ. 30 ஆயிரம் வசூல் : ஆடியோ வைரல்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நீராட, தரிசனத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் ரூ. 30 ஆயிரம் வசூலித்ததாக சமூக வலைதளத்தில் ஆடியோ வைரலாகியது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 22 தீர்த்தங்களை நீராட ஒரு நபருக்கு ரூ.25ம், கோயிலில் ருத்ர அபிஷேகம் ரூ.3500, சுவாமி தரிசனத்திற்கு ரூ.100, ரூ. 200ஐ கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதி இருவர் சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். அதன்படி டிராவல்ஸ் ஏஜன்ட் அறிமுகப்படுத்திய ராமேஸ்வரத்தை சேர்ந்த வெளிநபர்கள் இருவர், தம்பதியினரை கோயிலில் புனித நீராட செய்து, ருத்ர அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்து வைத்தனர். இதற்கு கட்டணமாக ரூ. 30 ஆயிரத்தை கேட்டு வாங்கியுள்ளனர். இதனால் வேதனையடைந்த தம்பதியினர், இந்திய தூதரக அதிகாரி மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் ஆன்லைனில் புகார் செய்து ஆஸ்திரேலியா சென்றனர். இதனையடுத்து மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவுபடி டிராவல்ஸ் நிறுவன வெப்சைட்டை லாக் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் நிர்வாகி, இச்சம்பவம் குறித்து உருக்கமாகவும், ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் பணம் பறித்து ஏமாற்றுவதாக ஆடியோ வெளியிட்டார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மதுரை, ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அரசு அதிகாரிகள் விசாரனை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !