பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :12 hours ago
சங்கராபுரம்; பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. பின்னர் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.