பத்ரகாளியம்மன் கோயில் வருடாபிஷேக விழா; அம்மனுக்கு 18 வகை அபிஷேகம்
ADDED :12 hours ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்திரகாளியம்மன், கருப்பணசுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, மூலவர்களுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.