காஞ்சிபுரம் காரை புளியாத்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
ADDED :90 days ago
காரை; காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில் பிடாரி புளியாத்தம்மன் கோவிலில், ஆவணி திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 7ம் தேதி காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, 8ம் தேதி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காலை 11:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர் அலங்காரத்தில் பிடாரி புளியாத்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.