உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்திபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காந்திபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

அவிநாசி; அவிநாசி,காந்திபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் பழமையான கோவிலான அங்காளபரமேஸ்வரி கோவிலில் இன்று காலை 5.31மணிக்கு அசுவதி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய நன்னாளில்,மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைகளில் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம், ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலையில் ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா நடைபெறுகிறது. கோவில் கும்பாபிஷேக பணிகளை,தக்கார் பவானி, கோவில் ஆய்வாளர் செல்வப் பிரியா,ரோமா ரிஷி கோத்திர சிவாச்சாரியார், அகஸ்திய கோத்திரம், குன்னத்தூர் அய்யர், முதலியார், பிள்ளைமார், போயர்,தேவேந்திரகுல வேளாளர் மற்றும் கண்ணூர் செட்டியார் ஆகிய சமூகத்தினர்கள், அவிநாசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை தலைவர் சுப்ரமணிய குருக்கள், பொருளாளர் ரங்கராஜ், செயலாளர் நந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூக திருமண மண்டப அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !