உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லூர் மூகாம்பிகைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் வழங்கி இளையராஜா தரிசனம்

கொல்லூர் மூகாம்பிகைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் வழங்கி இளையராஜா தரிசனம்

கொல்லூர்; பிரபல இசையமைப்பாளர் இளையராஜா கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம் பாடி அருள் பெற்றார்.  இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவில் அம்மனுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா வைர கிரீடம் மற்றும் வாளை காணிக்கையாக வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் இங்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அவர் தனது இசை சேவைகளையும் வழங்கி வருகிறார். அந்த இந்நிலையில் வைர கிரீடம் மற்றும் ஆபரணங்களுடன், வீரபத்திரருக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வாளை இளையராஜா காணிக்கையாக வழங்கி வழிபட்டுள்ளார். இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் என கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !