உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கனுார் முத்தால மாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கனுார் முத்தால மாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கனுார்; காட்டேரிக்குப்பம் முத்தால மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணியை அமைச்சர் பூஜை செய்து துவக்கி வைத்தார்.  மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் பழமையான முத்தால மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவக்க விழா இன்று நடந்தது.  இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தது. அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, பூஜை செய்து திருப்பணியியை துவக்கி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !