வீரங்கிபுரம் பிடாரிஅம்மன் கோவிலில் தேர்திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்
ADDED :99 days ago
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் அய்யனார், பிடாரிஅம்மன் கோவிலில், கடந்த 7ம் தேதியன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஊரணிப் பொங்கல் மற்றும் கொலு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர் திருவிழா நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. முன்னதாக மூலவர் அய்யனார், பிடாரி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேர் வடம் பிடித்து வழிபட்டனர்.