ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வரதராஜா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை ஹோமங்களும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹுதி பூஜையும் 8 மணிக்கு யாத்ரா தானமும் நடைபெற்றது. காலை ஒன்பது மணிக்கு கடன் புறப்பட்டு 9.30 மணிக்கு வரதராஜ பெருமாள் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் இந்து அறநிலை துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.கோவில் சார்பில் பொதுமக்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மாலை சாமியின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள் தரும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-08.2025 அன்று நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலை பூஜை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வெள்ளிக் கவசம் -சூலாயுதத்துடன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருண்பாளித்த அம்மன்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.