பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆண்டு விழா
ADDED :104 days ago
பெருமாநல்லுார்; பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற உத்தமலிங்கேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள் உள்ளன. இரு கோவிலிலும் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் முதலாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கோவிலில் காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.