புரட்டாசி பிறந்தது.. பெருமாளை தரிசிக்க திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்
திருப்பதி: திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. பெருமாளை தரிசிக்க திருமலை திருப்பதியில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. அவர்களுக்கு பல மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துவருகிறது.