உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் புரட்டாசி ஏகாதசி வழிபாடு; நம்பெருமாள் சிறப்பு புறப்பாடு

ஸ்ரீரங்கத்தில் புரட்டாசி ஏகாதசி வழிபாடு; நம்பெருமாள் சிறப்பு புறப்பாடு

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி ஏகாதசி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.


பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் இன்று புரட்டாசி மாதப்பிறப்பு மற்றும் ஏகாதசி நன்னாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட வறுமை நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. விழாவை முன்னிட்டு நம்பெருமாள் சிறப்பு புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !