உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பாரிமுனையில் திருமலை திருக்குடை ஊர்வலம் துவங்கியது

சென்னை பாரிமுனையில் திருமலை திருக்குடை ஊர்வலம் துவங்கியது

 சென்னை; திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், ஐந்து நாள் திருமலை திருக்குடை ஊர்வலம், சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று துவங்கியது. இந்த திருக்குடை ஊர்வலத்தை, தமிழக கவர்னர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. நேற்று துவங்கிய இந்த திருக்குடை ஊர்வலம், சென்னையில் இருந்து திருப்பதி வரை உள்ள கோவில்களுக்கு, 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படும். இந்நிகழ்ச்சிக்கு, சிவ சபா ஆசிரமத்தின் தலைவர் அன்னை ஞானேஸ்வரி கிரி தலைமை ஏற்றார். வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் திருச்சானுார் பத்மாவதி தாயார் திருக்கோவிலில் திருக்குடைகள் சமர்ப்பணமும், மாலை 4:30 மணிக்கு திருப்பதி திருமலையில் திருக்குடை சமர்ப்பணமும் நடக்கிறது. இதில், திரைப்பட நடிகர் ரஞ்சித், விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், அகில இந்திய டிரஸ்டி மணிகண்டன், தமிழ் ஜனம் டி.வி.,யின் நிர்வாக இயக்குநர் மது மற்றும் விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !