திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் அகோபில ஜீயர் தரிசனம்
ADDED :122 days ago
திருப்புத்துார்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் அகோபில ஜீயர் சாமி தரிசனம் செய்தார்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலுக்கு நேற்று ஆந்திரா ஸ்ரீ அகோபில மடத்தின் 46ம் பட்டம் ஜீயர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரெங்கநாத யதீந்திர மகாதேசிகன் வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர், பட்டாச்சார்யர்கள் வரவேற்பளித்தனர். தொடர்ந்து கோயில் அஷ்டாங்க விமான தங்கத்திருப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் எம்பெருமான், நரசிங்கபெருமான் தாமிர சிற்பங்களில் தங்கத்தகடு பதித்தார். தொடர்ந்து பரிவார தெய்வங்களை வணங்கி மூலவரான ஸ்ரீபூமிநீளா சமேத சவுமியநாராயண பெருமாளை தரிசனம் செய்தார்.