தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் புரட்டாசி வழிபாடு
ADDED :131 days ago
விழுப்புரம்; தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் புரட்டாசி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத துவக்கத்தையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஐயப்பன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வினியோகிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், மற்றும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர்.