மன்னேரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா
ADDED :16 days ago
வாலாஜாபாத்; பழையசீவரம், மன்னேரி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில், மன்னேரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் போது, பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் மூலம் அம்மனுக்கு கலச அபிஷேகம் நடந்தது. மதியம், அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் மன்னேரி அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.