அக்னி தீர்த்த புரோகிதர்கள் மீது அவதூறு : போலீசாரிடம் புகார்
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரை புரோகிதர்கள் மீது அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாயிடம் புரோகிதர்கள் புகார் செய்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரை புரோகிதர்கள் நலச்சங்கம் தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன் தலைமையில் புரோகிதர்கள் கோயில் போலீசாரிடம் கொடுத்த மனுவில் : பல ஆண்டுகளாக தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை வரை பக்தர்களுக்கு புரோகிதம் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் வடமாநில சேர்ந்த கிருஷ்ண பாண்டே, இவரது தம்பி மொராரி பாண்டே, சிலர் கடந்த சில ஆண்டுகளாக ராமேஸ்வரத்தில் தங்கி புரோகிதம் செய்கின்றனர். இவர்கள் இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலில் தலைமை குருக்களாக பணிபுரிவதாகவும், அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதம் செய்பவர்கள் பிற சமூகத்தினர் எனவும், பிராமணர்கள் இல்லை என பொய் கூறி அவதூறாக பேசியுள்ளார். இதனால் பக்தர்களிடம் குழப்பத்தையும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்திட திட்டமிடுகின்றனர. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.