உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகிரியில் சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; பக்தர்கள் தரிசனம்

நீலகிரியில் சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; பக்தர்கள் தரிசனம்

குன்னூர்; நீலகிரியில், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை நடந்து வருகிறது.


ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சத்ய சாய் பிரவாஹினி எனும், தெய்வீக அன்பின் ஓட்டம், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை பயணமாக நடத்தப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8ல் வந்த, ரத யாத்திரை பயணம் முதுமலையில் துவங்கி, கார்குடி, கூடலூர், அணிக்கொரை கடநாடு, காவிலோரை, கெங்கல், சின்ன குன்னூர், பெந்தட்டி, பாரமன்னு , மோரிகல், நெல்லிமந்து, , தொரை யட்டி, அறையட்டி, எப்ப நாடு, கெங்க முடி, தூனேரி, கொதுமுடி, பாரதியார் நகர், பெரியார் நகர், குன்னுார் நகர், ஜெகதளா, காட்டேரி, கோடேரி, அதிகரட்டி முட்டிநாடு மைனலா ,தேனாடு உட்பட பல கிராமங்களுக்கும் சென்றன. கிராமங்களில் மக்கள் தரிசனம் செய்தனர். நாளை மேலூர், மஞ்சக்கம்பை, நாளை கரியமலை, மஞ்சூர், 22ல் முள்ளிகூர், இத்தலார், 23ல் நஞ்சநாடு, குருத்துகுளி, 24ல் ஊட்டியில் ரத யாத்திரை நடக்கிறது. 25ம் தேதி இந்த ரதம், கேரள மாநிலம் புறப்படுகிறது. சாய் பக்தர்கள் கூறுகையில், இந்த யாத்திரை அளவில்லா அருளால் பிறந்த புனிதமான அன்பின் தெய்வீக பயணம். ஜாதி மத , சமய பிரிவுகள் போன்ற எல்லா வேறுபாடுகளையும் தாண்டி, ஒவ்வொரு இதயத்திலும், தெய்வீக அன்பின் ஜுவாலையை மீண்டும் எழுப்பும் ஒரே நோக்கில் அனைவரையும் ஒன்றிணைக்கும் புனித முயற்சியாகும், " என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !