உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பிரசாதம் விநியோகிக்க மொபைல் உணவு வாகனம் நன்கொடை அளித்த பக்தர்

திருப்பதியில் பிரசாதம் விநியோகிக்க மொபைல் உணவு வாகனம் நன்கொடை அளித்த பக்தர்

திருமலை; திருப்பதியில் நேற்று வெள்ளிக்கிழமை, பெங்களூருவில் உள்ள ராமையா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுந்தர் ராம் என்ற பக்தர், திருமலை ஸ்ரீவாரியில் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க ரூ. 14 லட்சம் மதிப்புள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் படா தோஸ்த் மொபைல் துரித உணவு வாகனத்தை நன்கொடையாக வழங்கினார். இதனுடன், திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோ கர்ஷங்கர் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. நன்கொடையாளர் இந்த வாகன சாவியை ஸ்ரீவாரி கோயில் முன் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை அலுவலர் லோகநாதம் மற்றும் வெங்கடாத்ரி நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !