உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியஅரவங்குறிச்சி முத்துக்கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா

பெரியஅரவங்குறிச்சி முத்துக்கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா

நத்தம்; நத்தம் அருகே பெரியஅரவங்குறிச்சி முத்துக்கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று மதியம் ஊர் மந்தையில் சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மாலையில் வாணவேடிக்கைகளுடன் மின் ரதத்தில் முத்துக் கருப்பணசாமி எழுந்தருளி குதிரை, நாய், காளை, மதிலை சிலைகளுடன் பெரிய அரவங்குறிச்சியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பத்து ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !