உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி; தங்க அங்கி அலங்காரத்தில் அரியக்குடி திருவேங்கடமுடையான் அருள்பாலிப்பு

புரட்டாசி சனி; தங்க அங்கி அலங்காரத்தில் அரியக்குடி திருவேங்கடமுடையான் அருள்பாலிப்பு

சிவகங்கை; காரைக்குடி அடுத்த அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தங்க அங்கி அலங்காரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள், அலமேலுமங்கை தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திருவேங்கடமுடையான் சுவாமி அலர்மேல் மங்கை தாயாருடன் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் தங்கஅங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்குடி, மாத்துார், கண்டனுார், புதுவயல், தேவகோட்டை ரஸ்தா, கோட்டையூர், கண்டனுார், பள்ளத்துார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !