புரட்டாசி சனி: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருக்கோஷ்டியூர்; கல்லல் ஒன்றியம் கொங்கரத்தி வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி துவக்கத்தை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புத்தூர் அருகே கல்லல் ஒன்றியம் கொங்கரத்தி வன்புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர் தங்க கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் பகதர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 8: 30 மணிக்கு புண்யாகம், தொடர்ந்து சங்கல்பம் நடந்து மலர்கள் ஆவாகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஜெபங்கள்,ேஹாமங்கள் நடந்தன. பி்ன்னர் மலர்கள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பிரசாதமாக மலர்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் மூலவர் தரிசனம் மட்டும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.