திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிபுள்ள 15 தங்கப் பதக்கம் நன்கொடை
ADDED :14 days ago
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலுக்கு 15 தங்கப் பதக்கங்களும், இரண்டு வெள்ளிப் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.
ஸ்ரீ சன்ஸ்தான் கோகர்ணா போர்டகாலி ஜீவோத்தம மாதா மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதிஷ தீர்த்த சுவாமிகள் திருப்பதி ஏழுமலையானுக்கு 15 தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளி பானைகளை வழங்கினார். திருமலையில் இன்று திங்கள்கிழமை வழங்கப்பட்ட இதன் மதிப்பு ரூ.1.80 கோடி ஆகும். ஸ்ரீவாரி கோவில் ரங்கநாயகுலா மண்டபத்தில், பேஷ்கர் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, சுவாமிகள் பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொக்கசம் பொறுப்பாளர் குருராஜ சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.