உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் சார்பில் பல்லக்கில் பகவான் கிருஷ்ணர் திருவீதியுலா

இஸ்கான் சார்பில் பல்லக்கில் பகவான் கிருஷ்ணர் திருவீதியுலா

அன்னூர்; உலக புனித நாம விழாவை முன்னிட்டு, பல்லக்கில் கிருஷ்ணர் திருவீதி உலா நடந்தது.


செப்.17 முதல் 23ம் தேதி வரை இஸ்கான் இயக்கம் சார்பில், உலக புனித நாம விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, அன்னூரில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டபத்தில், இஸ்கான் மாவட்ட நிர்வாகி சீனிவாச ஹரிதாஸ், கீதை காட்டும் பாதையில் என்னும் தலைப்பில் பேசியதாவது : வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிருஷ்ணர் நாமத்தை உச்சரிக்க வேண்டும். தினமும் வீட்டில் சிறிது நேரம் பகவத் கீதை சுலோகங்களை வாசிக்க வேண்டும். பெருமையோ, இகழ்ச்சியோ தானாக வருவதில்லை. கடமையை நல்ல முறையில் செய்தால் உரிய பலன் கிடைக்கும். கடமையைச் செய்துகொண்டு பலனை எதிர்பாராமல் இருப்பதே அனேக அற்புதங்களுக்கு வழிவகுக்கும். இவ்வாறு, அவர் பேசினார். இதையடுத்து கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் கிருஷ்ணர், பலராமன் வீற்றிருக்கும் பல்லக்கு முக்கிய வீதியில் வழியாக சென்றது. வழியில் பக்தர்கள் வரவேற்பளித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !