சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை
ADDED :6 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு ஐந்து முகங்கள் கொண்ட காயத்திரி அலங்காரம் செய்யப்பட்டது. ராமர், சீதை, லட்சுமணன், சஞ்சீவி அனுமான் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார். இதில் ஆர்ய வைசிய சமூக நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.