உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழா பூச்சொறிதலுடன் துவங்கியது

வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழா பூச்சொறிதலுடன் துவங்கியது

வத்தலக்குண்டு; வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழா முதல் நாள் பூச்சொறிதலுடன் துவங்கியது. ஏராளமான பெண்கள் பூ கூடைகளுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு பூஜை செய்து சிறப்பு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடத்தி வழிபட்டனர். நேற்று முன்தினம் மஞ்சளாற்றில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலை அடைந்தது. நேற்று பொங்கல் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !