உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம்

திருப்பதி; இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று புதன்கிழமை இரவு திருமலை வந்தார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் தேவஸ்தான தலைவர்  பி.ஆர். நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.இன்று ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் 102 கோடி ரூபாயில் கட்டப்பட்ட,  ஓய்வறையை துணை ஜனாதிபதி மற்றும் முதல்வர் திறந்து வைத்தனர். இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 2000 பேர் ஓய்வு எடுக்க முடியும்.  அதைத் தொடர்ந்து, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை இருவரும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !