திருத்தணி முருகன் கோவில் சார்பில் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் விழா
ADDED :6 days ago
திருத்தணி; திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், ராமலிங்க அடிகளார் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருத்தணி முருகன் கோவில் சார்பில், ராமலிங்க அடிகளார் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, முருகன் கோவிலின் உபகோவிலான சுந்தர விநாகயர் கோவில் வளாகத்தில், இணை ஆணையர் ரமணி முன்னிலையில், ராமலிங்க அடிகளாரின் உருவப்படத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உருவப்படத்தை கோவில் ஊழியர்கள், முக்கிய சாலை வழியாக சென்று, மலைக்கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின், மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உருவப்படத்திற்கு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன.