உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூர், – தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கடந் 22ம் தேதி தொடங்கியது. வரும் அக்.1ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதை தொடர்ந்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். கலை விழாவின் முதல் நாளான 22ம் தேதி பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் நடைபெற்றது. 23ம் தேதி மீனாட்சி அலங்காரமும், 24ம் தேதி சதஸ் அலங்காரமும், 25ம் தேதி காயத்திரி அலங்காரமும், 26ம் தேதி அன்னபூரணி அலங்காரமும், 27ம் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 28ம் தேதி சரஸ்வதி அலங்காரமும், 29ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 30ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 1ம் தேதி விஜயதசமி அலங்காரமும் நடை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !