உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் விளக்கு பூஜை

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் விளக்கு பூஜை

காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி உலக நன்மைக்காக காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று மூலவர் அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை, உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், அர்ச்சகர்கள் லலிதா சகஹஸ்வர நாமம் மற்றும் வேத மந்திரங்கள் ஓத, பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !