உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் இருந்து சென்ற திருக்குடைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்

சென்னையில் இருந்து சென்ற திருக்குடைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தையொட்டி, தமிழ்நாடு இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால் ஜி தலைமையில் திருமலை ஸ்ரீவாரிக்கு குடைகள் வழங்கப்படுகின்றன.


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவத்தில் கருடசேவையின்போது ஏழுமலையானுக்கு திருக்குடைகளை, தமிழக பக்தர்கள் சார்பில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் கடந்த 20 ஆண்டுகளாக சமர்ப்பித்து வருகிறது. 21ம் ஆண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. தொடக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி வரவேற்றார். உடுப்பி பலிமார் மடம், பீடாதிபதி வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். வழிநெடுக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபடட  திருக்குடைகள் இன்று 27ம் தேதி திருமலை திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !