கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_154953_165548222.jpgகோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_154953_165554502.jpgகோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_154953_165559591.jpgகோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்கோவை; புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என். மில் போஸ்ட்-பாலாஜி கார்டன் அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் சன்னதியில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் துளசி மாலை அலங்காரத்துடனும் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.