திருப்பதி பிரம்மோற்சவம்; கேட்பதைதரும் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி உலா
திருப்பதி; திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார்.திருமலை – திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி பிரம்மோற்சவம் இந்தாண்டு செப்., 24ம் தேதி துவங்கி அக்., 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில்,நாள்தோறும் விதவிதமான வாகன உலா நடைபெற உள்ளது. விழாவின் நான்காம் நாளான இன்று உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். சுவாமி ஊர்வலத்திற்கு முன் பல வித வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் நடனமாடி வந்தனர். விழாவில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி அனில் குமார் சிங்கால், பல வாரிய உறுப்பினர்கள், முரளி கிருஷ்ணா மற்றும் பலர் வாகன சேவையில் பங்கேற்றனர்.