ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழா
ADDED :5 days ago
ஆண்டிபட்டி; ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி 2ம் சனி வார விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நரசிங்கப்பெருமாள், செங்கமலத் தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்தனர். ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.