ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :5 days ago
செங்கல்பட்டு; ஆத்துார் முக்தீரஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா துவங்கி, அக்., 3ம் தேதி வரை நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 21ம் தேதி துவங்கியது. அக்., 3ம் தேதிவரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு அலங்காரங்களில், அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஸ்ரீ மஹாலட்சுமி மலர் அலங்கராத்தில், நேற்று எழுந்தருளினர். சுமங்கலி பூஜை நடைபெற்றது. ஆத்துாரை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.